Blogroll

Thursday 19 December 2013

வெஜிடபுள் சூப்

தேவையான பொருட்கள் 

காய்கறி கலவை - 1 கப் (கேரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்)
தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை 

  • குக்கரில் தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய காய்கறிகள், தக்காளி சேர்க்கவும். இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு இவற்றை லேசாக தட்டி ஒரு சிறிய துணியில் முடிந்து போடவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு குலைய வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் முடிந்த துணியை தனியே எடுத்துவிட்டு காய் கறிகளை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து அதை வடிகட்டி வைக்கவும்.
  • ஒரு வானெலியில் வெண்ணெய் போட்டு அது சிறிது இலக ஆரம்பிக்கவும் வடிகட்டி வைத்ததை ஊற்றவும்.
  • சுரு சுருவென்று வந்ததும் சோலமாவினை(கார்ன் ஃப்ளார்) கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.  
  • பரிமாறும் போது விருப்பத்திற்கேற்ப மிளகு தூள் சேர்த்து பரிமாறவும். 





குறிப்பு : பரிமாறும் போது கார்ன் அல்லது பொறித்த பிரட் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.






























Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!