Blogroll

Wednesday 27 November 2013

முட்டை பணியாரம்

தேவையான பொருட்கள் 

முட்டை - 3

அரைக்க 

தேங்காய் - 1/4 முடி(சிறியது) or 2 சில்
சோம்பு -1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பொரிகடலை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை 

  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து கொள்ளவும்.
  • முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து பின் அரைத்து வைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • பணியார காடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதன் குழியில் சிறிது எண்ணெய் ஊற்றி பின் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும்.
  • இரு புறமும் நன்கு வேகுமாறு பிராட்டிவிட்டு எடுக்கவும்.
  • சுவையான முட்டை பணியாரம் தயார். இது காரக் குழம்பு, புளிக்குழம்பு சத்தத்திற்கு பொருத்தமாக இருக்கும். 













Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!